சென்னை: சென்னை  மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு  வரும் 17ந்தேதி ரூ. 5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சென்னை  மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு  டிசம்பர் 3-ம் தேதி மட்டும் ரூ.5-க்கு பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம்  ஏற்கனவே அறிவித்தி ருந்தது. ஆனால், அப்போது,  புயல் மற்றும் கனமழை காரணமாக  பயணிகள் செல்ல முடியாத நிலையில், அதை சலுகையை டிச.17-ம் தேதி மாற்றி  மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி டிசம்பர் 17ந்தேதி அன்று  ரூ. 5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. . க்யூஆர் பயணச்சீட்டு, பேடிஎம், ஃபோன் பே பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே ரூ. 5 கட்டணச் சலுகை என்று தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, காகித க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது என்று தகவல் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக கட்டணச் சலுகை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் டிச.3-ம் தேதி மெட்ரோ க்யூ.ஆர் குறியீடு மூலம் ரூ.5 செலுத்தி பயணச்சீட்டுகள் பெற்று ஒருவழிப்பாதைப் பயணத்தை மேற்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த ரூ.5 பிரத்யேகக் கட்டணம் டிச.17ந்தி தேதி மட்டுமே செல்லுபடியாகும் எனவும், இந்த சலுகையானது இ-க்யூ.ஆா் குறியீடு மூலம் பெறப்படும் பயணச்சீட்டு களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.