சென்னை:

த்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவில்  இனப்படுகொலைக்கு ஆளான தமிழர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது  என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான  கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாப்படி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலி ருந்து வந்திருக்கும் இந்து, சீக்கியர், கிறித்துவர், பார்சி, புத்தம், ஜெயின மதம்  சார்ந்த மக்கள் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், சுமார்  9 மணி நேர வாக்குவாதத்திற்குப் பிறகு மக்களவையில்  குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதா குறித்து டிவிட் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், இனப்படுகொலைக்கு ஆளான தமிழர்களும், பாகுபாட்டை எதிர்கொள்ளும் முஸ்லிம்களும் ஏன் மசோதாவில் இருந்து விலக்கப்படுகிறார்கள்? இது உண்மையிலேயே நன்மை பயக்கும் மசோதா மற்றும் வாக்கு சேகரிக்கும் பயிற்சியாக இல்லாவிட்டால், இந்த CAB ஏன் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் மற்றும் ஸ்ரீலங்காவின் முஸ்லிம்களை அழைத்துச் செல்வதை நிறுத்தக்கூடாது?  என்று கூறி உள்ளார்.