'லா லிகா' கால்பந்து – அதிக கோலடித்து சாதித்தார் மெஸ்ஸி!

Must read


மேட்ரிட்: தற்போது நடைபெற்று முடிந்த ‘லா லிகா’ கால்பந்து தொடரில், தனது பார்சிலோனா அணியை கோப்பை வெல்ல வைக்க முடியவில்லை என்றாலும், அதிக கோலடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மெஸ்ஸி.
ஒரு சீசனில் அதிக கோலடித்தவர் என்ற பெருமையை, இவர் 7வது முறையாகப் பெறுகிறார். நடைபெற்று முடிந்த இந்த சீசனில் இவர் மொத்தம் 22 கோல்களை அடித்துள்ளார்.
அதிக கோல்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரியல் மேட்ரிட் வீரர் கரீம் பென்சிமா 21 கோல்கள் மட்டுமே அடித்தார்.
அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, ஒரே சீசனில், கிளப் போட்டிகளில் அதிகபட்சமாக 50 கோல்கள் வரை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article