அழைப்பிதழ்
அழைப்பிதழ்
சென்னை:
சென்னை வடபழனியில் வரும் செப்டம்பர் 2,3,4 தேதிகளில் ஆண்களுக்கான பாலியல் சிறப்புக் கண்காட்சி நடைபெறுகிறது.
உலக பாலியல் நல தினம் மற்றும் காமராஜ் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவை முன்னிட்டு  இந்த பாலியல் சிறப்புக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில் சிறந்த பாலியல் வல்லுனர்களால் ஆண்மைக் குறைவு, விந்தணுக்களே இல்லாமை, விந்தணுக்கள் குறைவு,  குழந்தையின்மை போன்ற பாலியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு  இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கிறது.
மேலும் பாலுணர்வு தொடர்பான வீடியோ பதிவுகள், விளக்கப்படங்கள்,  செய்திகளும் இந்த கண்காட்சியில் இடம்பெறும்.
இது குறித்து டாக்டர் காமராஜ் தெரிவித்ததாவது:
“செப்டம்பர் 2-ம் தேதி காலை 9:00 மணிக்கு வசந்த் நிறுவன குழுமத்தின் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான ஹெச்.வசந்தகுமார், காமராஜ் பல்நோக்கு புதிய மருத்துவமனையை திறந்து வைத்து, ஆண்களுக்கான பாலியல் சிறப்புக் கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார். மேலும் உலக பாலியல் நல தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக, பாலுணர்வு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பத்து லட்சம் மக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியும், மனிதசங்கிலி அமைக்கும் நிகழ்வும் நடத்தப்படுகிறது.

டாக்டர் காமராஜ்
டாக்டர் காமராஜ்

புதிதாக திறக்கப்படும் கேஎம்ஹெச் (KMH – Kamaraj Multispeciality Hospital) மருத்துவமனையில் உடல் சார்ந்த அனைத்துவிதமான நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படும்.
மருத்துவமனையின் உள்கட்டமைப்பும், மருத்துவ உபகரணங்களும் ஹை-டெக் முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. நோயாளிகளின் வசதிக்காக 100 படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் சிகிச்சை வழங்கும் வகையில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் இந்த மருத்துவமனையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன்  ஒப்பந்தம் செய்திருப்பதால் பொருளாதார  ரீதியாகவும் நோயாளிகளுக்கு வழிகாட்ட முடிகிறது.
மேலும் உடனடி ஆம்புலன்ஸ் வசதியும், அனைத்து வகையான மருந்துகளை கொண்ட மருந்தக வசதியும் இங்கு உண்டு.
சென்னை வடபழனி 100 அடி சாலையிலுள்ள டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை, பாலியல் ரீதியான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கிறது. மேலும் இங்கு உலக பாலியல் ஆராய்ச்சி மையம், உலக சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் மற்றும் சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகின்றன” என்று டாக்டர் காமராஜ் தெரிவித்தார்.