ரியோடி ஜெனிரோ:
ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி    கடைசி லீக் ஆட்டத்தில்  கனடாவுடன் மோதியது.  இந்த போட்டி சமனில் முடிந்தது.
ரியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி கனடாவை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இந்திய வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சியை கனடாவின் கோல் கீப்பர் தீவிரமாக தடுத்தார்.

இந்தியா - கனடா மோதிய காட்சி
இந்தியா – கனடா மோதிய காட்சி

விறுவிறுப்பாக தொடங்கிய இரண்டாவது பாதியில், ஆட்டத்தின்  8-வது நிமிடத்தில், இந்திய அணியின் ஆகாஷ் தீப்தான்  முதல் கோலினை அடித்தார்.  இதையடுத்து தீவிரமாக ஆடிய கனடா அணி, அடுத்த  இரண்டே நிமிடத்தில் கனடா கேப்டன் ஸ்காட் டுப்பெர்  கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும்  சமன் நிலையில் இருந்தது.
அதன்பிறகு இரு அணிகளும் தீவிரமாக விளையாடிது.  இந்தியா வீரர் ராமன் தீப் ஒரு கோல் அடிக்க இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதையடுத்து,  கனடா அணியின் கேப்டன் மீண்டும் ஒரு கோல் அடித்ததால்  2-2   மீண்டும் சமன் ஆனது.
பி பிரிவில் நடைபெற்ற இந்தியா கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்ததால் சமனில் முடிந்தது
இது வரை நடந்து முடிந்த  5 ஆட்டங்களில் தலா  2 வெற்றி, 2 தோல்வியுடன் , ஒரு சமன்  பெற்று இருக்கிறது. இதன்  காரணமாக இந்திய அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
+++++++++++++++=