ரியோடிஜெனிரோ
ஒலிம்பிக் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த ஜோசப் ஸ்கூலிங் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.  அமெரிக்காவின் தங்கமகன் மைக்கேல் பெல்ப்ஸ்-சை வென்றது  வரலாற்று  சாதனை ஆகும்.
joseph-schooling-800 (1)
முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் 21 வயதான ஜோசப் ஸ்கூலிங்  50.39 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.
அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் இரண்டாவது இடமே வர முடிந்தது.
ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இதுவரையில் 27 தங்கம் வென்று முதல் வீரராக திகழும் 31 வயதான அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து ஜோசப் ஸ்கூலிங் கூறியதாவது: எனது இளம்வயது கதாநாயகன் மைக்கேல் பெல்ப்ஸை தோற்கடித்தது வரலாற்று சாதனை. நான்
மிகவும் பரவசமாக இருக்கிறேன். பெல்ப்ஸ் எனது வெற்றியை எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்றார்.
21வயதான ஜோசப் 50.39 வினாடிகளில் முதலிடம் பெற்றார். அடுத்து  பெல்ப்ஸ் 51.14 வினாடிளில் முடித்து இரண்டாவது இடத்தையும்,
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த்   லெஸ்லோசெஸ் 51.14 வினாடிகளில் முடித்து 3வது இடத்துக்கும் வந்தனர்.