• திமுக துணைப் பொதுச்செயலர் சற்குண பாண்டியன் காலமானார்
 • ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 70 பேர் கொண்ட 7 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

saniya-popanna

 • ஒலிம்பிக் டென்னிஸ் : அரையிறுதிக்கு சானியா- போபண்ணா ஜோடி தகுதி
 • லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஷாருக் கான் தடுக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்க தூதர்!
 • அடுத்தடுத்து குவியும் புகார்கள்… வெளிநாடு சென்றுவிட்டார் சசிகலா புஷ்பா?
 • புவனேஷ்வர் குமார் அபார பந்து வீச்சு: மே.இ.தீவுகள் அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்!
 • ஒலிம்பிக் ஹாக்கி.. சமனில் முடிந்த இந்தியா – கனடா ஆட்டம் !
 • ரியோ ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அட்டானு தாஸ் போராடி தோல்வி.
 • ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்.. ககன் நரங், செயின் சிங் ஏமாற்றம்!
 • சுந்தரா டிராவல்ஸ்’ ராதாவிடமிருந்து கணவரை மீட்டுத் தாருங்கள்’… அதிமுக பிரமுகரின் மனைவி கதறல்!மவுலிவாக்கம் கட்டிடம் இடிக்கும் பணி… மேலும் அவகாசம் வழங்கி சென்னை ஹைகோர்ட் உத்தரவு
 • பேட்மிண்டனில் அடுத்த ‘ஷாக்’… ஜுவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா மீண்டும் தோல்வி!
 • 18 வயதானவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்த கூடாது- ஹைகோர்ட்
 • வானொலியில் தமிழ் செய்திகளை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
 • அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர்.. டோணி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
 • நீதிபதிகள் நியமனங்களில் அலட்சியம் ஏன்? மத்திய அரசு மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல்
 • தமிழகத்தில் 7 கூடுதல் எஸ்.பிக்கள் இடமாற்றம் – டிஜிபி உத்தரவு
 • சட்டமன்றத்தில் 110 விதியின் நடைமுறையை சின்னாபின்னமாக்கிவிட்டார் ஜெ., : ஸ்டாலின் புகார்
 • கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டாரா… விஜயகாந்த், பிரேமலதா மீது சி.எம் செல்லில் பெற்றோர் மனு
 • கபாலிக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள்? கேட்கிறார் பிரேமலதா
 • காணாமல் போன குழந்தைகள் வழக்கு: 4 மாதத்துக்குள் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
 • மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து- வேன் மோதி பயங்கர விபத்து- பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
 • இந்திய எல்லைகளில் தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தலாம்… பாக். எச்சரிக்கை!
 • இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியல்… முதலிடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

chandra-babu-naidu45-12-1470999443

 • குஜராத் மாநிலத்தில் நாகப்பாம்புடன் செல்பி எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
 • மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு டிவியில் தோன்றப் போகும் ரஜினி.. ஆக. 15ல்.. விஜய் டிவியில்!
 • சமூக வலைதளங்கள் கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்கள்! ரங்கராஜ் பாண்டே பேச்சு
 • தமிழ்த் திரையுலகினரை ஊக்குவிக்கும் பொருட்டாக மிகப் பெரிய விழா எடுத்து விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி
 • என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்

mulla daim

 • முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு: ஆக. 26-இல் மீண்டும் ஆய்வு நடத்த முடிவு
 • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.23,752-க்கு விற்பனை
 • நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை இடமாற்றம் செய்வது என்பது அரசினுடைய விருப்பமில்லை என்றும், நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாகவே அப்படிச் செய்ய வேண்டியது உள்ளது – முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

koodngulam

 • கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினர்களை அழைத்துச் செல்ல வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.பாண்டி (முதுகுளத்தூர்) கோரிக்கை
 • ஆடி கார் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்தது ஜாமீன்
 • வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை
 • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் அங்கம்தான்: பிரதமர் மோடி
 • புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை கல்வியாளர்கள் ஆழமாக ஆராய வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்
 • செம்மரக் கடத்தல் வழக்கு: 32 தமிழகத் தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுப்பு
 • 100 மீ., பட்டர்பிளை நீச்சல் பிரிவில் வெள்ளி வென்றார் பெல்ப்ஸ்
 • நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ms subbu

 • எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு: சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா.
 • சோனியாவுக்கு கிருமித் தொற்று: மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க ஆலோசனை
 • அடுத்த ஆண்டு முதல் ரயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
 • இரோம் ஷர்மிளா ஆம் ஆத்மியில் இணைந்து போட்டியிட்டால் முதல்வர் வேட்பாளராக நிறுத்த தயாராக உள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது
 • காஷ்மீர் மாநில கிராமப்புறங்களில், வரும் சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் தினத்தை கொண்டாட பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
 • ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்புக்கு ரூ.120 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை!
 • தாம்பரத்தில் இருந்து சென்றபோது மாயம்: விமானப்படை விமானத்தில் இருந்தவர்கள் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
 • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றுவதா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
 • அடுத்த ஆண்டு முதல் ரயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொது பட்ஜெட்டுன் சேர்த்து ரயில்வே உள்ளிட்ட போக்குவரத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடும் கொண்டு வரப்பட உள்ளது.
 •  மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபர கணக்கீட்டின்படி நடப்பு பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் லோக்சபா 110.84j சதவீதமும், ராஜ்யசபா 99.54 சதவீதமும் செயல்பட்டுள்ளது.
 • இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 15 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. லோக்சபாவில் 15 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு விட்டன. ராஜ்யசபா, ஜிஎஸ்டி உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட லோக்பால், லோக்ஆயுக்தா போன்ற மசோதாக்கள் அரைமணி நேரத்திற்குள்ளாகவே நிறைவேற்றப் பட்டன. சிறு சிறு சலசலப்புக்கள் இருந்த போதிலும் இருஅவைகளும் சிறப்பாகவும், ஆக்கபூர்வமாகவும் செயல்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • மொத்தமாக கூட்டத்தொடர் நடைபெற்ற 20 நாட்களில் பெரும்பாலான நாட்கள் இரு அவைகளும் கூடுதல் நேரம் பணியாற்றி உள்ளன. 2004ம் ஆண்டிற்கு பிறகு தற்போதைய கூட்டத் தொடரிலேயே கேள்விநேரம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் 98 கேள்விகளுக்கும், ராஜ்யசபாவில் 84 கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளன.
 • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டு இன்றளவும் போக்குவரத்துக்கு மிகவும் துணை புரிந்து வருகிறது.
 • இது போன்று, மத்திய அரசு வைர நாற்கர ரயில்பாதை திட்டத்தின் மூலம் அனைத்து பெருநகரங்கள் மற்றும் வளர்ச்சி மையங்களை இணைக்கும் வகையில், டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களை மையமாக வைத்து ரயில் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களை தீட்டி உள்ளது. டில்லி-மும்பை, மும்பை- சென்னை, சென்னை- கொல்கத்தா, கொல்கத்தா-டில்லி, டில்லி-சென்னை, மும்பை- கொல்கத்தா ஆகிய 6 ரயில் பாதைகளில் அதிவேக ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இப்போது இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 • அதன்படி, டில்லி-மும்பை, டில்லி-சென்னை, மும்பை- சென்னை ஆகிய ரயில் பாதைகளில் அதிவேக ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது