துபாய்:
க்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்கள்- தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஆற்றிய உரையில், தமிழகத்திற்கும் துபைக்கும் இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்தவே துபாய் வந்துள்ளதாகவும், இன்று கையெழுத்தான பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் பேசினார். எஃகு தொழிற்சாலை மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க அந்நிய முதலீடுகளை ஈடுக்கும் வகையில், ரூ.1600 கோடி ரூபாய் முதலீடு செய்யும் அமீரக தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

அரபு தொழில் முதலீட்டாளர்களுடன் தமிழக முதல்வர் மேற்கொண்ட சந்திப்பு நிகழ்ச்சியில், ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் நோபல் குழுமம் சார்பில் 1000 கோடி ரூபாய் மதிப்பு எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.