நியூயார்க்

திர்ப்புகளை மீறி ஏவுகணை சோதனை நடத்தும் வட கொரியாவுக்குப்  பொருளாதாரத் தடை விதிக்க ஐநாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

தொடர்ந்து வடகொரிய அரசு ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது.  அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல  நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   ஆயினும் சமீபத்தில் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை நடத்தி அமெரிக்காவை மிரட்டி உள்ளது.

இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.   எனவே  ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் தாமஸ் கிரீன்பீல்டு

”பல நாடுகளின் எதிர்ப்பை மீறி :வடகொரியா, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. எனவே வடகொரியாவுக்கு கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என, ஐ.நா. சபையிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. 

விரைவில்  ஐ.நா., பாதுகாப்பு குழு விரைவில் கூடி, வடகொரியா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.”

எனக் கூறி உள்ளார்.