சென்னை: மறைந்த பங்காரு அடிகாளர் உடல் இன்று மாலை 5மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி சித்தர் பீட தலைவர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

 மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் கோயில் வளாகத்தில் உள்ள தியான மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. செவ்வாடை உடுத்தி ஆயிரக்கணக்காண பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அரசு மரியாதையுடன் இன்று மலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி கோயிலின் சித்தர் பீடத்தின் ஆன்மீக குருவாக இருந்து வந்த பக்காரு அடிகளார், பக்தர்களால் “அம்மா” என்று அழைக்கப்பட்டு வந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் காலமானா நிலையில், அவருக்கு இன்று சடங்கு நடைபெறுகிறது.  பங்காரு அடிகளார் மறைவு தமிழ்நாடு மக்களையும், உலகம் முழுவதும் இருக்கும் ஆதிபராசக்தி கோயில் பக்தர்களையும் அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பலரும் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவரது உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது  உடல் மேல்மருவத்தூரில் உள்ள அடிகளார் தெருவில் அமைந்துள்ள பங்காரு அடிகளார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  லட்சக்கணக்கான பக்தர்கள், அரசியல் கட்சியனர்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டிலிருந்து உடல் கோவில் அருகே உள்ள இடத்தில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.  இதனால் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பங்காரு அடிகளாரின்  உடல் நல்லடக்கம் செய்தவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேல்மருத்துவர் ஆதிபராசக்தி கோவில் கருவறை அருகே பங்காரு அடிகளார் அருள்வாக்கு கூறிய இடத்தில் சமாதி கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணிக்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ல் பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்படும் என வணிகர் சங்கமும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.