சென்னை:

ர்நாடக அரசு மேகாதாது அணைகட்டுவதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கக்கூடாது என்று என்று மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேகதாது மலைப்பகுதியில் அணை கட்டி தண்ணீரை சேமிக்க  கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டினால், தமிழகத்திற்கு காவிரியில்  வந்துகொண்டிருக்கும் தண்ணீரும் நிறுத்தப்பட சாத்தியக்கூறுகள் உள்ளது. இதன் காரணமாக மேகதாது அணை கட்ட தமிழக அரசு மட்டுமின்றி விவசாயிகள் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக அரசு மீண்டும் மேகதாது அணை கட்ட முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தமிழக விவசாயிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழ்நாட்டை கேட்காமல் மேகதாதுவுக்கு அனுமதியளிக்கக் கூடாது எடப்பாடி கடிதம் எழுதிஉள்ளது.

இந்த விவாகரம் தொடர்பாத தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே  பிரதமர் நரேந்திர மோடிக்கு இருமுறை கடிதம் எழுதியிருந்த நிலையில்,. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகருக்கும் ஒரு மாதத்துக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இன்றும் இரு அமைச்சர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,  காவிரியில் மேகதாது உள்ளிட்ட எந்த அணைகட்டும் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசை கேட்காமல் அனுமதி வழங்கக்கூடாது. திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அனுமதி வழங்கினால் நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.