டெல்லி:

கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் மேகாலயா மாநில கவர்னராக தமிழகத்தை சேர்ந்த வி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவர் அருணாசலபிரதேச கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில் சண்முகநாத் மீது கவர்னர் மாளிகையில் பணிபுரியும் 98 ஊழியர்கள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு பாலியர் புகார் குறித்து கடிதம் அனுப்பினர்.

இதையடுத்து, கவர்னர் சண்முகநாதன் தனது பதவியை நேற்றிரவு ராஜினாமா செய்தார். சண்முகநாதனின் ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஏற்றுக்கொண்டார்.

அசாம் ஆளுநர் பன்வரிலால் புரோகித்துக்கு மேகாலய கவர்னராக கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகாலாந்து கவர்னர் ஆச்சார்யாவுக்கு கூடுதலாக அருணாச்சல பிரதேச ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.