மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ;ஆச்சார்யா’ திரைப்படம் ஏப்ரல் 29 ம் தேதி திரைக்கு வருகிறது.

ராம் சரண் தேஜா, பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கொர்டலா சிவா இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.

அதேவேளையில், காஜல் அகர்வால் திருமணம் முடிந்து கருவுற்றிருந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில், படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இதில் காஜல் அகர்வால் கலந்து கொள்ளவில்லை. தவிர, படத்தில் காஜல் அகர்வாலின் பங்கு குறித்து விழாவில் கலந்து கொண்ட யாரும் பேசவில்லை.

இதுகுறித்து இயக்குனர் கொர்டலா சிவா-விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து, காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறினார்.

படத்தின் ‘ரஷ்’ பார்த்தபோது காஜல் அகர்வால் நடித்திருந்த காட்சிகள் திருப்திகரமாக இல்லை என்பதால் சிரஞ்சீவி மற்றும் காஜல் அகர்வாலிடம் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தப் படத்தில் ராம் சரண் தேஜா-வுக்கு மட்டும் ஜோடியாக பூஜா ஹெக்டே உள்ளார். சிரஞ்சீவிக்கு ஜோடி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.