இந்திய டுவிட்டரை வென்ற ராகுல் காந்தியின் ‘பிடி’ நாய்!!

Must read

டில்லி:

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் செல்லப் பிராணியான ‘பிடி’ என்ற நாய் தனது எஜமானரின் டுவிட்டர் கணக்கை இயக்கியதாக வெளியான தகவலை தொடர்ந்து தற்போது தலைப்பு செய்திகளில் ‘பிடி’ இடம்பெற்றுள்ளது.

ராகுல்காந்தி டுவிட்டர் கணக்கை நான் தான் இயக்கினேன் என்று அந்த செல்லப்பிராணி கூறுவது  போன்ற வாசகங்கள் அந்த டுவிட்டர் பதிவில் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக பாஜக அரசு மீதான ராகுல்காந்தியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், அவரது டுவிட்டர் கணக்கை யாரோ இயக்குகிறார்கள் என்று பாஜகவினர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தில் அவரது செல்லப் பிராணியின் கருத்து வெளியாகியுள்ளது. தற்போது  இந்த  செல்லப்பிராணி கூறுவது   போன்ற   கருத்து டுவிட்டரில் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும், இந்த டுவிட்டர் பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோவில் அந்த நாய் பிஸ்கட் சாப்பிடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமை அன்று இந்திய டுவிட்டரில் ‘பிடி’ தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இது இன்றும் தொடர்ந்தது. எனினும் இந்த பதிவு பாஜக உள்ளிட்ட சில கட்சியினருக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சியினர் இந்த பதிவை நகைச்சுவையாக கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 ஆயிரம் பேர் இதை மறு டுவிட் செய்துள்ளனர், இதன் மூலம் இந்த சுற்றை ‘பிடி’ வென்றுள்ளது என்றது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article