‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கும் மீரா மிதுன்…!

Must read

பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக கலந்துக் கொண்ட மீரா மிதுன்,சர்ச்சையான விவகாரங்களால் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மீரா மிதுன், தினம் ஒரு அப்டேட் என்று சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர், சமீபத்தில் பீர் குடித்தவாறே ரசிகர்களுடன் சாட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறாராம்.

மேலும் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்திலும் மீரா மிதுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

More articles

Latest article