‘அண்ணாத்த’ அப்டேட் : 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த குஷ்பு – மீனா கூட்டணி….!

Must read

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மீனா மற்றும் குஷ்பு இருவரும் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படத்தை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ஹைதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் அங்கு சென்றார். நயன் தாராவும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது மீனா மற்றும் குஷ்பு இருவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இன்று சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.

நாட்டாமை படத்தில் மீனா மற்றும் குஷ்பு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீனா மற்றும் குஷ்பு இருவரும் இணைந்துள்ளனர்.

 

More articles

Latest article