நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து வழங்கும் ‘கூழாங்கல்’….!

Must read

இதர நடிகர்கள் நடித்த நல்ல படங்களை வாங்கி வெளியிட விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி முடிவு செய்துள்ளது.

முதலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து யுவன் இசையமைப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி.

அவர்கள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “மிக அரிதான ஒரு நாள்தான், ஒரு படைப்பை பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிகட்ட பணிகளில் இருந்த கூழாங்கல்” எனும் திரைப்படத்தைப் பார்த்த போது தோன்றியது.

கூழாங்கல்”.P.S. வினோத்ராஜின் முதல் படம். தலைப்பை போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.

முழுக்க முழுக்க திறமையான புது குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தை பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் திரு. யுவன்ஷங்கர் ராஜா.

இப்படத்தின் மூலமாக எங்களுக்கு கிடைத்த திரை அனுபவத்தை, நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பை பொறுப்பேற்றுள்ளோம்.

உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அன்புடன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்” என்று கூறியுள்ளனர்.

 

More articles

Latest article