கமலாப்பழம் (Citrus Aurantium).

கமலாப்பழம் ஒரு கலப்பின பழம் , அதிகமான மருத்துவ குணம் கொண்ட பழமாகவும் விளங்குகிறது
ஆரஞ்சு மாதிரியே விளங்கினாலும் சுளையாக கிடைப்பது கமலாப்பழமாகும் . இதன் மாறுபட்ட பழ வகையே நார்த்தங்காய் ஆகும்

இது கலப்பின பழமாக இருப்பதால் உலகம் முழுதும் 50 க்கும் மேற்பட்ட பெயர்களை கொண்டுள்ளது


.
இதர பெயர்கள்

Aurantii Fructus, Aurantii fructus immaturus, Aurantii pericarpium, Aurantium, Bigarade, Bigarade Orange, Bitter Orange Flower, Bitter Orange Peel, Chao Zhi Ke, Chisil, Citrus amara, Citrus aurantium, Citrus Aurantium Fruit, Citrus bigarradia, Citrus vulgaris, Extrait de Zeste d’Orange, Fleur d’Orange Amère, Flos Citri Auranti, Fructus Aurantii, Fructus Aurantii Immaturus, Green Orange, Kijitsu, Marmalade Orange, Meta-Synephrine, N-Methyltyramine, Naranja Amarga, Neroli Oil, Norsynephrine, Octopamine, Octopamine HCl, Orange Amère, Orange de Séville, Orange Peel Extract, Orange Verte, Seville Orange, Shangzhou Zhiqiao, Sour Orange, Synephrine, Synéphrine, Synephrine HCl, Synéphrine HCl, Synephrine Hydrochloride, Zeste d’Orange Amère, Zhi Ke, Zhi Qiao, Zhi Shi

பெயரே இப்படி என்றால் அதன் பலன் கம்மியாக இருக்குமா?

இதில் நார்ச்சத்து, நீர்சத்து, இதய செயல்பாட்டுக்கு தேவையான பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், விட்டமின் சி, பி காம்ளக்ஸ் போன்ற தாதுப்பொருட்கள் உள்ளன

பயன்
இதய செயல்பாட்டுக்கு தேவையான பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இருதய துடிப்பை சீர் செய்ய உதவுகிறது.
சிறுநீர செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தி சிறுநீர கல் ஏற்படாமால் தடுக்கிறது. வயிற்றில் எளிமையாக சீரணம் செய்து சீரணமண்டலத்தினை ஒழுங்கு செய்கிறது

பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் ஏற்படும் வாந்தியை இந்தப்பழத்தின் சாற்றை தேன் / வெந்நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி மட்டுப்படும்

இதில் இருக்கும் ஆன்டாக்சிடென்ட் புற்று நோய் வராது தடுப்பதற்கும், நோய் எதிர்ப்பு திறனை உருவாக்குவதற்கும், செல் வளர்ச்சிதை மாற்றத்தினை ஒழுங்குபடுத்திடவும் உதவுகிறது

தோலில் ஏற்படக்கூடிய சொரி , சிரங்கை சீர் செய்கிறது, வராமல் தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய விட்டமின் சி ஸ்கர்வி என்ற நோய் வராமல் பாதுகாக்கிறது மற்றும் பற்கள், ஈறுகளை பலப்படுத்துகிறது
உடலில் ஏற்படக்கூடிய அனைத்துப்புண்களும் விட்டமின் சீ இருப்பதால் உடனடியாக புண் ஆற்றப்படுகின்றது.

மேற்பூச்சு
கமலாப்பழத்தோல் காய வைத்து , பொடி செய்து முகத்தில் தடவி வர கொப்பளங்கள் , கரும்புள்ளி, முகப்பறு, புண்கள் சரியாகும்

இதன் தோல்களை வெந்நீருடன் கொதிக்கவைத்து குளித்து வந்தால் தேகம் பளபளக்கும், உடலில் கொப்பளங்கள் , புண்கள் வராது – இது ஒரு வகையான அரோமா தெரபி/ கமலாப்பழத்தின் சாற்றை தேன் உடன் கலந்து முகத்தில் பூசி வர தோல் மெதுவாகவும் பளபளப்பாகவும், மென்மையாகவும், அழகாகவும் மாறும்

நாட்டு கமலா நறுங்கனியை யுண் பார்க்கிங்
கோட்ட மிடும்பித்த மோதக்கேள்—வாட்டுங்
தினவுகரப் பான்கிரந்தி சேருமோ மாதே
தினந்தினம் போகமிகுந் தேர்                – சித்தர் பாடல்

கமலாப்பழ சாற்றை பருகிவந்தால் பித்தம், உடல் சூடு குறையும், தாகம் தீரும், கரப்பான், சொறி சிறங்கு, தினவு தீரும். நீண்ட நாட்களுக்கு கமலாப்பழத்தின் சாறை பருகிவந்தால் தேகம் பலப்படும் தாது பலம் உண்டாகும் உடல் அழகு பெறும்

சர்க்கரைநோயுள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கமலாப்பழத்தினை உண்ணலாம். நீண்ட நாள் நோயாளிகளாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையை பெற்று இந்த பழத்தினை/பலச்சாற்றினை உண்டுவரலாம்

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கல்லாவி
99429-22002