இன்றைய மருத்துவ பலன்கள்
 
தினசரி சில துளசி இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வர தொண்டைப் புண் வராது. பஸ்ஸில் பயணம் செய்யும்போது எலுமிச்சை வற்றலை வாயில் அடக்கிக் கொண்டால் வாந்தி வராது.
பொன்னாங்கன்னி கீரையை சூப் செய்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். மூல சூடு ஏற்படாது.
அரைக்கீரை இலைகள் 5-10 வரை தினமும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
leaves
பிஞ்சு புடலங்காயை பச்சடி செய்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். சொறி, சிரங்கு, அரிப்பு நீங்கும்.
பிரண்டையை வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
வேப்பிலைச் சாறுடன் மோர் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் பூச்சிகளே இருக்காது.
தினமும் மதியம் சாப்பிட்ட உடன் ஒரு வெற்றிலையை சிறிது பாக்கு, சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலைபாரமாக இருந்தால் கருநொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதன் ஆவியைப் பிடித்தால் உடனே குணமாகும்.
சீதாப்பழக் கொட்டைகளைக் காயவைத்து தூளாக்கி நல்லெண்ணெய்யில் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் பேன்கள் அழிந்துவிடும்.
மூட்டு வலியா? சுக்கை இழைத்து மூட்டுக்களில் தடவினால் குணமாகி விடும்.
மாதவிலக்கின் போது, இரத்தப் போக்கு அதிகமானால் சாதம் வடித்த கஞ்சியில் ஒரு டம்ளர் மோர்விட்டுப் பருகினால் இரத்தப் போக்குக் கட்டுப்படும்.
முகப் பருவை கிள்ளக் கூடாது. பச்சைப்பயறு மாவை அரைத்து வைத்துக் கொண்டு தினமும் இரவில் பருவின்மேல் பூசி வைத்து , காய்ந்ததும் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் முகப்பரு மறையும்.
தோல்வியாதிகள் காரணமாக உடம்பின் மேல்பகுதி தடித்து சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி தழையை நன்றாக அரைத்து சொர சொரப்பாக இருக்கும் இடத்தின் மீது பூசவேண்டும். இவ்வாறு மூன்று நாள்கள் செய்து வர, தடிப்பு மாறி தோல் மிருதுவாகிவிடும்.
இயற்கை மருத்துவம் அங்கீகாரம் பெற்ற ஆலோசகர் சிவசித்தன் அருண்:9094830243