புதுடெல்லி: அயோத்தியா பிரச்சினையை சமரசமாக தீர்க்க, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நடுவர் குழு, தனது அறிக்கையை சமர்ப்பிக்க, நிர்ணயிக்கப்பட்ட காலஅளவை விட, அதிக அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி, இந்த நடுவர் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்எம் இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் உறுப்பினர்கள்.

வழக்கில் தொடர்புடையவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க இந்த குழுவிற்கு 8 வாரகாலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 13ம் தேதி இந்தக் குழுவினர் ஃபைஸாபாத்தில் தங்களின் முதல் கூட்டத்தை நடத்தினார்கள்.

ஆனால், சில சிக்கல்களால் நிர்ணயிக்கப்பட்ட காலஅளவிற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க முடியாத இந்தக் குழு, இன்னும் சற்று கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.