டில்லி

ள்நாட்டு உற்பத்தி குறித்து கணக்கிட பயன்படுத்திய விவரங்களில் பல தவறுகள் உள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த 2017 முதல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திஎம் சி ஏ 21 என்னும் விவர அறிக்கைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது, இந்த எம் சி ஏ 21 விவர அறிக்கை என்பது கார்பரேட் நிறுவன அமைச்சகம் அளிக்கும் தகவல்கள் ஆகும் இந்த தக்வல்களின் அடிப்படையில் விவர அறிக்கை மத்திய கணக்கியல் நிறுவனம் அளித்து வருகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் பல முறை சோதிக்கப்பட்ட பிறகே அறிக்கையில் சேர்க்கப்படுகின்றன.

இந்த எம் சி ஏ 21 விவர அறிக்கைகள் கடந்த 2015 ஆம் வருடம் முதல் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை இரு வருடங்கள் சோதனை செய்த பிறகே மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கெடுப்புக்கு பயன்படுத்த படுவதாக அரசு கூறி வருகிராது. இந்நிலையில் தேசிய கணக்கெடுப்பு ஆய்வகம் இந்த கார்பரேட் நிறுவனங்களில் பல போலி நிறுவனங்கள் இருந்ததை கண்டறிந்துள்ளது.

அந்த போலி நிறுவனங்கள் சரியாக இயங்காத போதிலும் அவைகளும் இந்த விவர அறிக்கயில் இடம்பெற்றுள்ளன. அந்த விவர அறிக்கையில் 45% நிறுவனங்கள் போலி நிறுவனங்கள் ஆகும். எனவே இந்த விவர அறிக்கையை பயன்படுத்தி தயாரிக்கபப்ட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கெடுப்பு சரியாக இருக்க வாய்ப்பிலை என தேசிய கணக்கெடுப்பு ஆய்வகம் தெரிவித்துள்ளது.