னது டிவிட்டர்  கருத்து ஊடகங்களால் தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது என்று  காந்தியை விமர்சித்ததாக கூறப்படும் நிதி சவுத்திரி விளக்கம் தெரிவித்து உள்ளார்.

மும்பை மாநகராட்சியில், துணை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்ரி , கடந்த 17ம் தேதியன்று  தனது டிவிட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தியின் உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நீக்குவோம். உலகம் முழுவதும் உள்ள காந்தி சிலைகளை அகற்று வோம். அவர் பெயரில் இருக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சாலை அனைத்துக்கும் வேறு பெயர் வைப்போம். மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்க முடியும். காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றி என டிவிட் பதிவிட்டிருந்தார்.

இது சர்ச்சையையை கிளப்பியது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கொந்தளித்தனர். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நிதி சவுதாரியை  பணியை விட்டு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நிதி சவுத்ரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில முதல்வர்  தேவேந்திர பட்னாவிஸுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், 17.05.2019 அன்று தான் பதிவிட்ட  டிவீட்டை நீக்கிவிட்டேன்.  தான் செய்த டிவிட் ஊடகங்களால்  திரித்து கூறப்பட்டுள்ளது எனவும், காந்தியை மரியாதை குறைவாக பேசியதில்லை எனவும்  விளக்கம் அளித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

காந்திஜி குறித்த தனது டிவிட்டை  சிலர் தவறாக புரிந்து கொண்டார்கள் என்றும், காந்திஜியை அவமதிக்கும் கனவை கூட நான் செய்ய மாட்டேன் என்றுதெ ரிவித்துள்ளவர், காந்தியை தான்  ஆழ்ந்த மரியாதையுடன் வணங்குகிறேன், கடைசி மூச்சு வரை செய்வேன் என்று தெரிவித்து உள்ளார்.

கோட்சே ஆதரவாளர்களை கிண்டல் செய்யும் வகையிலே அந்த கருத்தை பதிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

நிதி சவுத்ரி ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், காந்தியின் “சத்திய சோதனை களுடன் என் அனுபவங்கள்”  தன்னுடைய விருப்பமான நூல்களில் ஒன்று என்று டிவிட் செய்துள்ளார்,

அதுபோல  மற்றொரு ட்வீட்டில், உண்மையை மற்றும் அஹிம்சை கொள்கையின் அர்த்தத்தை தனக்கு அளிப்பதற்காக காந்திக்கு நன்றி என்றும் டிவிட் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் , சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, நிதி சவுத்ரியை மகாராஷ்ட்ரா அரசு அதிரடியாக மாற்றியுள்ளது. மந்திராலயாவில் குடிநீர் விநியோக துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.