சென்னை:
எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் என்று துணைவேந்தர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் இறுதியாண்டு எம்.பி.பி.எஸ். தேர்வில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கான தேர்வு இன்று தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான மையங்களை சரியான நேரத்தில் சென்றடைய முடியாமல் போகும் தேர்வர்கள், எந்த ஒரு இணைக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வர்கள் செல்லுபடியாகும் தங்களுடைய ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையை வைத்திருக்கவேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnmgrmu.ac.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.