சென்னை

சென்னை மேயர் பிரியா திமுக கவுன்சிலர்களுக்கான கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார்.

வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வரும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இந்த போட்டிகளில் இளைஞரணி, அயலக அணி, மாணவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.

இந்த போட்டியில் மேயர் தலைமையிலான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அணியும் விளையாட உள்ளதால் இதற்காக கவுன்சிலர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

சென்னை மாநிலக் கல்லூரியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தீவிர பயிற்சி மேற்கொண்டு பந்து வீச்சு, பேட்டிங் பயிற்சியை அவர் தொடங்கி வைத்த நிலையில், போட்டிக்காக அந்த அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் திமுக நிர்வாகிகளுக்கு இடையே நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்காக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பயிற்சி எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.