சென்னை: தமிழ்நாட்டில் ‘மயோனைஸ்’ மீதான தடை மேலும் ஒராண்டு நீட்டிப்பு  செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது மயோனைஸ் (Mayonnaise) . இதன்முலம் பல்வேறு நோய்கள் பரவுவதாக எழுந்த சர்ச்சையையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மயோனஸ் தயாரிப்புக்கு தடை விதித்தது. இருந்தாலும் பல பகுதிகளில் மயோனஸ்  விநியோகம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.  குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது.

குறிப்பிக,  சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.  தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், அதற்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  பச்சைக் முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸின் உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கிங், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றின் மீதான தடையை, மேலும் ஒராண்டு தடை நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

மயோனஸ் வேண்டாம் ஏன்?

மயோனஸ் என்பது திக்கான மற்றும் க்ரீமியான தன்மையுடன் இருக்கும் ஓர் உணவுப் பொருளாகும். இதை பக்க உணவாகப் (சைடு டிஷ்) பயன்படுத்தி சாப்பிடுகின்றனர். இதை அதிகமாக தந்தூரி, கிரில், பார்பிக்யூ, ஷவர்மா போன்ற உணவுகளுடன் சேர்த்தே சாப்பிடுகின்றனர்.

மயோனசில், பச்சை முட்டை, சர்க்கரை, எண்ணெய், வினிகர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றைச் சேர்த்து மயோனஸ் தயாரிக்கப்படுகிறது. இதனால் உடல்பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது,   மயோனஸ் உட்கொண்ட சிலருக்கு பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது ஈ.கோலி (E.Coli – Escherichia coli), சால்மோனெல்லா பாக்டீரியா (Salmonella bacteria) என்ற நோய்த்தொற்றுகள் பாதித்துள்ளன.

இவை பெரும்பாலும் வயதானவர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களைப் பாதிக்கும். அதோடு, பல கடைகளில் மயோனஸைத் தயாரித்து 2-3 நாட்களுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பராமரித்து விற்பனை செய்கின்றனர்.

இதனால், மயோனஸில் அதிக பாக்டீரியா வளர்ச்சி ஏற்படும். அதனால், தமிழ்நாடு அரசு மயோனஸ் விற்பனையைத் தடை செய்துள்ளது.

மயோனஸின் ஆரோக்கிய ஆபத்துகள் 

மயோனஸில் பச்சை முட்டையைச் சேர்ப்பதால் மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதில் வெள்ளைச் சர்க்கரை, அதிகப்படியான எண்ணெய் சேர்ப்பதாலும் உடல் பருமன், மாரடைப்பு, நீரிழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மயோனஸ் என்பது ஓர் ஆபத்தான உணவுப் பொருளாகும். அதனால், மயோனஸைத் தவிர்ப்பது நல்லது.

மயோனஸ் என்பது பல ஆரோக்கிய ஆபத்துகளைக் கொண்ட உணவுப் பொருள் என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. பாக்டீரியா தொற்றுகள், உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது  என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.  இதன் காரணமாக அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

[youtube-feed feed=1]