லக்னோ:
பா.ஜ.க உ.பி.மாநில பா.ஜ.க. துணைத்லைவர் தயா சங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதி கூறு போட்டு விற்பனை செய்து வருவதாகவும், ஒவொரு தொகுதியை விலைபேசி விற்று விடுவதாகவும், அதிக விலை கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும், மாயாவதியை விலை மாதுவுடன் ஒப்பிட்டு பேசினார்.
-bspmayawathi
அவரது இந்த பேச்சு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக தயாசங்கர் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
மாயாவதியை தரக்குறைவாக பேசிய வழக்கில், அவர்மீது ஜாமீனில் வெளிவர, முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீசார் எந்த நேரத்திலும் தயாசங்கரை கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் விரைவில் சரணடைவார் எனத் தெரிகிறது.