லக்னோ:

டைபெற உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, உ.பி. மாநிலத்தில் தேசிய கட்சிகளை புறக்கணித்து விட்டு,  சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது பகுஜன் சமாஜ்கட்சி.

இந்த இரு கட்சிகளும், உ.பி.யில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று அறிவித்து உள்ளன.

இந்த நிலையில், லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிட வேண்டாம் முடிவு செய்துள்ளதாகவும், ஒரு தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதே முக்கியம் கட்சியின் வெற்றிக்காக பிரசாரம் செய்வதே தனது முதல் கடமை என்று தெரிவித்து உள்ளார்.

1995 ஆம் ஆண்டில் நான் உ.பி. முதல்வராக பதவி ஏற்றபோது, ​​உ.பி. சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அதுபோல மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமானால், 6 மாதத்திற்குள் லோக்சபா அல்லது ராஜ்யசபா உறுப்பினராக வேண்டும். இப்படி இருக்கும்போது தான் தற்போது போட்டியிடவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும்,  உத்தரபிரதேசத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்பது தனக்கு தெரியும் என்று கூறியவர், தனது முடிவை கட்சியினர் ஏற்றுக்கொள் வார்கள் என்று ம் கூறி உள்ளார். இது பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.