சென்னை:
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது.
1mouli
மழை காரணமாக மாலை 5 மணிக்கு கட்டிடம் தகர்க்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம்  இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கியது. அந்த  கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம் இன்று இடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்தக் கட்டிடம் இன்று  பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மழை காரணமாக மாலை 5 மணிக்கு இடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.