மதுரை
நேற்று மதுரையில் கள்ளழகர் சித்திரைத் திருவிழா தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை ஆகும். ஒரு சில திருவிழாக்கள் அந்த கோவில்களில் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடதக்கதாகும்
அவ்வகையில் மதுரையில் நடைபெறும் முக்கிய திருவிழாவான மீனாட்சி அம்மன் திருமண் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆகியவை உலகப் புகழ் பெற்றதாகும். இதைக் காண ஆயிரக் கணக்கானோர் வருவது வழக்கமாகும்.
இந்த ஆண்டுக்கான மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. நேற்று இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான முகூர்த்த சப்பர பூஜை நேற்று நடைபெற்றது.
விழாவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் புகழ்பெற்ற கோவில்களின் பட்டர்கள், சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையொட்டி பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.