கோவை: தமிழக அமைச்சர் மதிவேந்தன் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ராசிபுரம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும்,   மு. க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வருபவர் மதிவேந்தன். இவர் உடல்நலப் பாதிப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு குடலிறிக்கம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையில், சமீபத்தில் பிரதமா் நரேந்திர மோடியுடன் ராமேசுவரம் நிகழ்வுகளில் பங்கேற்றாா்.

இதைத்தொடர்ந்து, தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு குடலிறக்கம்  நோய்க்கான  அறுவை சிகிச்சை நடைபெற்றது.  தற்போது அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.