லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து ‘மாஸ்டர்’ பின்வாங்கியது.

தற்போது பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளிக்கு டீஸர் வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.

‘மாஸ்டர்’ டீஸருக்கான பணிகளைப் படக்குழு முடித்துவிட்டது. தேதி, நேரம் ஆலோசனை மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது.