டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்றுமுதல் மாஸ்க் கட்டாயம் என மீண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் முக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் ஏறி இறங்கி வருகிறது. தினசரி பாதிப்பு 15 ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை இருந்து வருகிறது. அதுபோல தினசரி உயிரிழப்பும் 25 முதல்வ 50 வரை தொடர்கிறது. இதனால் மாஸ்க் அணிவது நல்லது என மத்திய , மாநில அரசுகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றன. குரங்கு அம்மை தொற்றும் பரவி  ச்சுறுத்தல்கள் எழ தொடங்கியுள்ளதால், பல்வேறு இடங்களில் மாஸ்க் மீண்டும்  கட்டாயமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான  உத்தரவை  தலைமை நீதிபதி என்.வி.ரமணா பிறப்பித்துள்ளார். அனைத்து வழக்கறிஞர்களும் வாதாடும் போதும் மாஸ்க் காட்டயம் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.