போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்! விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் பேச்சு…

Must read

சென்னை:  தமிழகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அப்போது, போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் மாணவர்களிடம் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் விழிப்புணர்வு நாளாக இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சென்னையில் போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் முதல்வர் ஸ்டாலின், பிரசாரத்தை தொடங்கி  வைத்தார். இன்று போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழா சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமை தாங்கி நிகழ்ச்சியை வழிநடத்தினார். போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி தொடங்கி வைத்தார். பின்னனர் அவர் தனது உரையை தொடங்கினார்.

அப்போது, ‘ போதை பழக்கத்தால் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதனால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். போதையின் பாதை அழிவு பாதை. கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற செயல்களுக்கு போதை பழக்கம் தான் காரணம். அதனை விலை கொடுத்து வாங்கலாமா? போதை பழக்கத்தால் பல்வேறு பிரச்சனை ஏற்படும். அதன் பாதை அழிவு பாதை.

போதை பழக்க விழிப்புணர்வின் காவலர்களாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் செயல்பட வேண்டும். போதைப்பொருள் என்ற சமூக நோயை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். போதை பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்தவொரு தயக்கமும் காட்டாது. போதைக்கு தெரிந்த ஒரே பாதி அழிவு பாதை என்றவர், போதை பாதையை அடைப்பதும் எளிது. அவர்களை மீட்பது எளிது. அதனை சொல்ல வேண்டிய முறையும் எளிது தான்.’ என கூறியதுடன், பெற்றோர்கள் ஆசிரியர்கள் சேர்ந்துதான் இதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளோடு  அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர், குழந்தைகளிடம் அன்போடு பேசுங்கள், எத்ந காரணத்திற்காகவும் குழந்தைகளை விட்டு விடாதீர்கள் என்பது உள்பட பல்வேறு கருத்துக்கள் கூறி தனது உரையை முடித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, சென்னையில் நேற்று காலை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு மாநாட்டிற்கு தலைமை தாங்கிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

More articles

Latest article