கருப்புச் சட்டை அணிந்த பெரியார், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர்! ப.சிதம்பரம்

Must read

சென்னை; வாழ்நாள் முழுவதும் கருப்புச் சட்டை அணிந்த தந்தை பெரியார், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர்” என  ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

விலைவாசி உயர்வு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு எதிராக ஆகஸ்ட் 5 ஆம் தேதி கருப்பு ஆடை அணிந்து போராட்டம் நடத்திய காங்கிரசாரை விமர்சித்து, பிரதமர் மோடி கருப்பு உடையில் இருக்கும் படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, கருப்பு உடைகள் குறித்து அர்த்தமற்ற பிரச்னையை கிளப்புகிறார்கள் என்றும்,  “கருப்பு மந்திரத்தை” நம்புபவர்கள் மீண்டும் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது என கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம், வாழ்நாள் முழுவதும் கருப்புச் சட்டை அணிந்த தந்தை பெரியார், சனாதனத்தை நம்புவோரை தவிர, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர்” என பதிலடி கொடுத்துள்ளார்.

More articles

Latest article