திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், 7ம் நாளான இன்று சண்முகர் விதி உலா வந்தார். அவரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து ஆசி பெற்றனர்.

தமிழக்கடவுள்  முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை  வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா பிப்ரவரி 25ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி, தினசரி சண்முகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

7-ம் திருவிழாவையொட்டி (மார்ச் 3-ம் தேதி) இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து,  அதிகாலை 5 மணிக்கு உருகு சட்ட சேவை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து  காலை 9 மணி சுவாமி சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்த்தார்.

இன்று  மாலை 4.30 மணிக்கு சுவாமி ஷண்முகர் சிவப்பு சாத்திக்கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் வந்தடைவார்.

மாசித்திருவிழாவையொட்டி, திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளன.

12நாட்கள் மாசித் திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடியேறியது.. வீடியோ