டாக்கா

ங்காள தேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃபி மொர்டாசா ஒரு பேட்டியில் கிரிக்கெட்டுக்கும் நாட்டுப்பற்றுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்

சமீபத்தில் செமி ஃஃபைனலில் இந்தியாவிடம் வங்காள அணி தோற்றது.  அதன் பின் அந்த அணியைப் பற்றி கடும் விமர்சங்கள் எழுந்தன.  அதனால் அனைத்து அணி வீரர்களும் மனக்கசப்பு அடைந்தனர்.  அவர்கள் சார்பாக கேப்டன் மஷ்ரஃபி மொர்டாசா கருத்து தெரிவித்தார்;

அதில் அவர் கூறியதாவது :

கிரிக்கெட்டுக்கும் நாட்டுப் பற்றுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதே புரியவில்லை.  ஒரு மருத்துவர் பல உயிரைக் காக்கலாம், ஒரு விவசாயி உணவைக் கொடுத்து தன் நாட்டைக் காக்கலாம்  ஒரு உழைப்பாளி தனது உழைப்பின் மூலம் நாட்டை உயர்த்தலாம். இவர்களே நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்கள் இல்லை. ஒரு கிரிக்கெட் வீரர் தன் நாட்டுப்பற்று மூலம் என்ன செய்ய முடியும்?  எங்களால் வாங்கும் பணத்துக்கு வஞ்சனை செய்யாமல் விளையாடத்தான் முடியும்.  கிரிக்கெட்டில் தோற்றதினால் எங்களுக்கு நாட்டுப்பற்று இல்லாமல் போய் விடுமா?

மக்கள் தயவு செய்து கிரிக்கெட் மூலம் நாட்டுப்பற்றை காட்டும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  எங்களை குறை கூறும் நேரத்தில் நாட்டு முன்னேற்றத்துக்கான கடமைகளை செய்யலாம்.  அதுவே உண்மையான நாட்டுப்பற்று

இவ்வாறு கேப்டன் கூறியுள்ளார்