இன்று உலக அகதிகள் தினம்..

உலகின்  எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்கள் அகதிகளாக வெளியேறி வருவது தொடர்கதையாகிறது.

நாட்டில் உள்நாட்டு குழப்பம், வன்முறை கும்பல்களால் இனக்கலவரம் ஏற்படும்போது, பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள், உயிரைக் காப்பாற்றிகொள்ள அண்டை நாடுகளை நோக்கி இடம் பெயருகின்றனர்.

இவ்வாறு இடம்பெயரும் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக பாவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஆப்ரிக்க கண்டத்தில்தான் முதன்முறையாக ஜூன் 20-ம் தேதியை  உலக அகதிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து , கடந்த 2000-ம் ஆண்டு, டிசம்பர் 4-ம் தேதியன்று ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பல்வேறு காரணங்களால் இடம்பெயரும் மக்களுக்கு ‘அகதிகள்’ அந்தஸ்து வழங்கப்பட்டது. இதையடுத்த் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20-ம் தேதி சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இன்று உலக அகதிகள் தினத்தையொட்டி ஐ.நா. அகதிகள் தலைவர் பிலிப்போ கிராந்தி செய்தி வெளியிட்டுள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=zggw7qpxLds]