சென்னை,
சன்நியூஸ் விவாதத்தில் பேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி மெரினாவில் நடந்தது போராட்டம் அல்ல பிக்னிக் என்றார்.
அவரது கருத்துக்கு ஜல்லிக்கட்டு குறித்த விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, அவர் அதற்கு விளக்கம் அளித்தார்.
கருணாநிதி பேசும்போது, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் ஆடி,பாடி போராடினர் என கூறினார். மேலும், சென்னை மெரினாவில் போராடியவர்கள் அனைவரும் மாணவர்கள்தான் என்றும் சமூக விரோதிகள் யாரும் உள்ளே நுழையவில்லை என்றும் கூறினார்.
ஆனால் காவல்துறையினரோ சமூக விரோதிகள் மாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவி உள்ளனர் என்று குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக வன்முறை நிகழ்ந்தது என்றும் கமிஷனர் ஜார்ஜ் குற்றம்சாட்டி வருகிறார்.
வன்முறை குறித்து ஏற்கனவே காவல்துறையினர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் காவல்துறை அதிகாரியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
தற்போது செய்தி சேனல்களில் ஏதாவது ஒரு செய்தி குறித்து, விவாதம் என்கிற பெயரில் மக்களை குழப்பி வருவது அதிகரித்து வருகிறது.
விவாதத்தில் கலந்துகொள்பவர் தாங்கள்தான் சிறந்த அறிவாளி என்பதுபோல பேசுவதும், ஆளாளுக்கு கருத்து என்ற பெயரில் மக்களை குழப்பி வருவதுமே தொடர்ந்து வருகிறது.