மும்பை

ராத்வாடா பகுதியில் இந்த வருடம் மட்டும் தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது.

கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்வது மகாராஷ்டிராவில் அதிகமாகி உள்ளது.   மராத் வாடா பகுதி என அழைக்கப்படும் அவுரங்காபாத் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் தற்கொலை செய்துக் கொண்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.   இந்த வருடம் ஜனவரி முதல் கடந்த திங்கள் கிழமை வரை 814 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

மராத்வாடாவில் பேட் பகுதியில் அதிகபட்சமாக 167 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.  நாந்தத் பகுதியில் 127 பேரும், அவுரங்காபாத் பகுதியில் 111 பேரும் ஒஸ்மானாபாத் பகுதியில் 105 பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநில அரசால் அமைக்கப்பட்ட வசந்த் ராவ் நாயக் ஷேட்காரி ச்வலம்பன் மிஷன் என்னும் விவசாயிகள் கடனை ஆய்வு செய்யும் கமிஷனின் தலவரான கிஷோர் திவாரி, கடன் தள்ளுபடி என்றால் அந்தப் பணத்தை விவசாயிகள் கையில் கொடுக்கப்படும் என அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றது குறிப்பிடத்தக்கது.