சென்னை: நாளை மாரத்தான் ஓட்டம் போட்டி நடைபெற உள்ளதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதுபோல அதிகாலை 3மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரத்தான் போட்டியை ஒட்டி, சென்னையில் மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் சேவைகள், வருகின்ற (06.01.2024) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.

மேலும்,  மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ இரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் .

இந்த QR குறியீடை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம். வழக்கமான மெட்ரோ இரயில் சேவைகள் காலை 5.00 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.

சென்னை மாரத்தான் போட்டியையொட்டி,   போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னையில் மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 4 மணிக்கு தொடங்கும் மாரத்தான் ஓட்டம் நேப்பியர் பாலம், ‌ காமராஜர்‌ சாலை, சாந்தோம்‌ ஹை ரோடு, டாக்டர்‌.டி.ஜி.எஸ்‌.தினகரன்‌ சாலை, சர்தார்‌ படேல்‌ சாலை, ஓ.எம்‌.ஆர்‌, கே.கே.சாலை, இ.சி.ஆர்‌. வழியாக சென்றடையும்‌.

ஆகவே போர் நினைவிடத்தில் இருந்து திருவிக பாலம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் அடையார்‌ மார்க்கத்தில்‌ இருந்து வரும்‌ அனைத்து வாகனங்களும்‌ திரு.வி.க. பாலம்‌, டாக்டர்‌. டி.ஜி.எஸ்‌.தினகரன்‌ சாலை, சாந்தோம்‌ ஹைரோடு, காமராஜர்‌ சாலை மற்றும்‌ உழைப்பாளர்‌ சிலை வரை வழக்கம்‌ போல்‌ எந்தவித மாற்றமும்‌ இல்லாமல்‌ செல்லலாம்‌.

மேலும்‌ வாகனங்கள்‌ கொடி மரச்‌சாலை சாலைக்கு வழியாக திருப்பி விடப்பட்டு – வாலாஜா பாயின்ட்‌ அண்ணாசாலையில்‌ வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்‌.

ஆர்‌.கே.சாலையில்‌ இருந்து காந்தி சிலை நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ வி.எம்‌.தெரு சந்திப்பில்‌ திருப்பி விடப்படும்‌, அவ்வாகனங்கள்‌ ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ்‌ கார்னர்‌, ஆர்‌.கே.மட்‌ சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்‌.

மத்திய கைலாஷ்லிருந்து வரும்‌ வாகனங்கள்‌ பெசன்ட்‌ அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது, அவ்வாகனங்கள்‌ 13 சாலை, சாஸ்திரி நகர்‌ வழியாக திருவான்மியூர்‌ சிக்னல்‌ வழியாகத்‌ தங்களது இலக்கை சென்றடையலாம்‌. காந்தி மண்டபத்தில்‌ இருந்து வரும்‌ வாகனங்கள்‌ உத்தமர்‌ காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள்‌ சாஸ்திரி நகர்‌, திருவான்மியூர்‌ சிக்னல்‌ வழியாகத்‌ தங்களது இலக்கை சென்றடையலாம்‌.

பெசன்ட்‌ நகர்‌ ரவது அவென்யூவில்‌ இருந்து வரும்‌ வாகனங்கள்‌ எலியாட்ஸ்‌ பீச்‌ நோக்கி அனுமதிக்கப்படாமல்‌, எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்‌. MTC பேருந்துகள்‌ மட்டும்‌ பெசன்ட்‌ நகர்‌ டெப்போவிற்கு அனுமதிக்கப்படும்‌. பெசன்ட்‌ அவென்யூ ML பார்க்‌ நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. ஆகவே பொதுமக்கள்‌ மற்றும்‌ வாகன ஓட்டிகள்‌ சென்னை பெருநகர போக்குவரத்துக்‌ காவல்‌ துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.