மேடையில் நடனமாடியபோது மாரரைப்பு: மராத்தி நடிகை மரணம்

Must read

பூனே நகரில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு மேடையில் நடனமாடிய மராத்தி நடிகை அஸ்வினி ஏக்போதே திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

aswini

பல மராத்தி சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை அஸ்வினி ஏக்போதே (வயது 44) மிகச்சிறந்த பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை மாலை பூனே நகரில் பாரத் நாட்டிய மந்திர் அரங்கில் நடந்த நாட்டியதிரிவிதா என்ற நிகழ்ச்சியில் கடந்து கொண்டு நடனமாடினார், அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் மேடையிலேயே அவர் சுருண்டு விழுந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மேடையிலிருந்த கலைஞர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நடிகையின் இந்த பரிதாப மரணம் மகாராஷ்டிராவில் திரையுலக கலைஞர்களிடம் மிகுந்த அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்கள் உணர்வுகளை ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

aswini_tweets

அஸ்வினி மராத்தி மொழியில் மிக பிஸியான நடிகையாவார், ‘அக்லேச்சே காந்தே’ என்ற மராத்தி படம் மூலம் அறிமுகமானவ இவர் ‘தும்காதா’, ‘பாவரே பிரேம் ஹே’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘கணபதி பாபா மோரியா’, ‘தேபு’, ‘தன்யவார் தன்கா’ உள்ளிட்ட டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்.

More articles

Latest article