சத்தீஸ்கரில் மாவோயிஸ்டு தாக்குதல்: 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி

சுக்மா:
த்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது  மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூர வெடிகுண்டு தாக்குதலில்  நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

வட கிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சத்திஷ்கரில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில்  சி.ஆர்.பி.எப், போலீஸ் அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சி.ஆர்.பி.எப் 212-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் , கஸ்தாமரம் முதல் பாலோடி வரை உள்ள பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மாவோயிஸ்டுகளின் கோப்ரா படையை சேர்ந்தவர்கள், சாலைகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.‘

இன்று காலை 8 மணி அளவில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான வாகனம் தூக்கி வீசப்பட்டதாகவும், அதில் பயணம் செய்த சிஆர்பிஎப் வீரர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், மேலும் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும், அதையடுத்து, மாவோயிஸ்டுகளை வேட்டையாட முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
English Summary
Maoist Attack In Chhattisgarh's Sukma Kills 9 CRPF Personnel