சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை காவல்துறை இன்று புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவித்து உள்ளது. நேற்று இரவு 1மணிக்கு மேல் மட்டுமே மக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று பல கட்டுப்பாடுகளை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.
புத்தாண்டு அன்று சென்னையில் கடற்கரை சாலைகளில் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை” என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். மேலும் நட்சத்திர விடுதிகளில் ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
“சென்னையில் பைக் ரேசை தடுக்க சோதனைச் சாவடிக்ள அமைக்கப்படும்.
மொபைல் கண்காணிப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இரவில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.
மரணம் இல்லாத புத்தாண்டாக இந்தப் புத்தாண்டு அமைய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
எலியடஸ் கடற்கரையிலும் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
ரோந்து வாகனங்களில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளப்படும். யாரும் பைக் ரேசில் ஈடுபடக் கூடாது.
நட்சத்திர ஓட்டல்களில், மொத்த இருக்கையில் 80 சதவீதத்திற்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது விற்பனை செய்யும் இடங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்க கூடாது.
அடையாள அட்டை சோதனை செய்துதான் அனுமதிக்க வேண்டும். ந
நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ள வேண்டும்.
நட்சத்திர ஓட்டல்களில் உச்ச நீச்சல்குளம் அருகே எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது.
ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.
காவல்துறை தரப்பில் தரப்படும் கியூஆர் கோடு-ஐ குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் கார்களில் ஒட்ட வேண்டும்.
போதைப் பொருட்களை பயன்படுத்தும் நட்சத்திர விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்.
உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் இன்று முதல் தொடர்ந்து விடுதிகளை ஆய்வு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
‘நோ’ முக்கவசம்: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பச்சைக்கொடி – விவரம்