திருமலை:  ஏழுமலையான் குடிகொண்டிருக்கும் திருப்பதி கோவிலின் கர்ப்பகிர தங்க கோபுரத்தின் கோபுர தங்கக்கவசம் மாற்றியமைக்கப்பட உள்ளதால், சுமபார் 8 மாதங்கள் ஏழுமலையான், வேறுஇடத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.  இதுதொடர்பாக தேவஸ்தான் ஆலோசித்து வருகிறது.

உலக புகழ்பெற்ற  திருப்பதி ஏழுமலையான், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக கருதப்படுகிறார். திருமாலின் அற்புதமான திருத்தலம். நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது. புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோவில் முழுக்க முழுக்க பாரம்பரிய கோவிற்கலை கட்டுமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


2.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலின் உள்ளே 8 அடி உயர வெங்கடேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆனந்த நிலைய திவ்ய விமானம் எனும் தங்க பீடத்தின் மீது இந்த சிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தின் கண்களில் ஜொலிக்கும் மாணிக்க ரத்தினக்கற்கள் பொதிக்கப் பட்டுள்ளன. அத்துடன்,கற்பூரம் மற்றும் குங்குமம் போன்றவையும் இவற்றோடு சேர்த்து பொதிக்கப்பட்டிருக்கிறது. ஏழுமலையானின் திருமேனிக்குப் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை ரசாயனம் கலந்தது என்பதை அறிவோம். சாதாரண கற்களில் இதைத் தடவி வந்தால், காலப்போக்கில் அந்தக் கல்லில் வெடிப்பு விழும். ஆனால், ஏழுமலையானுக்கு வருடத்தில் 365 நாட்களும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள்; எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை.

இந்த நிலையில்,  வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் குடிகொண்டிருக்கும்  ‘ஆனந்த நிலையம்’ என்றழைக்கப்படும் கர்ப்பகிரக கோபுரத்தின் தங்க கவசத்தை மாற்ற தேவஸ்தானம்  திட்டமிடப்பட்டுள்ளது.   மூலவர் அருள்பாலிக்கும்,  மூன்ற டுக்கு ஆனந்த நிலையத்தின் கோபரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.  இந்த தங்கடத  இதுவரை, ஏழு முறை மாற்றப்பட்டுள்ளது.  கடைசியாக, 1950ல் தங்கக் கவசம் மாற்றும் பணி துவங்கியது; 1958ல் நிறைவடைந்தது. தற்போது, தங்கக் கவசம் மாற்றும் பணியை, எட்டு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அது பழுதடைந்து வருவதால், அதை மாற்றிஅமைக்க   திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக கோவில் அர்ச்சகர்கள், ஆகம நிபுணர்கள், கட்டட கலை நிபுணர்கள் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்து வரும் அதிகாரிகள்,  அடுத்த ஆண்டு ( 2023)  தங்கக் கவசத்தை மாற்றும் பணியை தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும்,  அதற்கு சுமார்  ஆறு முதல், எட்டு மாதங்கள் ஆகலாம் என்பதால், அந்த காலக்கட்டத்தின்போது, ஏழுமலையான இடம்மாற்றி வைத்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, பக்தர்கள் வழிபடுவதற்காக, தற்போதுள்ள கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தில் தற்காலிகமாக கோவில் அமைக்கப்பட உள்ளது. இங்கு அமைக்கப்படம் மூலஸ்தானத்தில்,  பெருமாளின் விக்கிரஹம் போன்ற மாதிரி வைக்கப்பட உள்ளது. மேலும், தற்போதுள்ள பெருமாளின் சக்தியை, ஒரு கும்பத்துக்கு மாற்றி, அதுவும் தற்காலிக இடத்தில் வைக்கப்படும் என்றும், அதன்மூலம் பக்தர்களுக்கு ஏழுமலையான் அருளாசி வழங்குவார் என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

இருந்தாலும் ஆனந்த நிலையத்தில் உள்ள பெருமாளுக்கு வழக்கம் போல பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். ஆனால், இதை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கூறிய தேவஸ்தான  அதிகாரிகள், கடந்த 1958ம் ஆண்டு தங்க கோபுரத்தின் மீதான தங்கக்கூரை மாற்றி அமைக்கப்பட்டபோது,  120 கிலோ தங்கம் மற்றும் 12 ஆயிரம் கிலோ செம்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்றும், ஆனால்,  தற்போதைய தேவை எவ்வளவு என்பது குறித்தும், அது எப்படி சேகரிக்கப்பட  இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் திருப்பதி  தேவஸ்தானம் வெளியிட்ட தகவலின்படி, பக்தர்கள் கொடுத்த நன்கொடையாக, தேவஸ்தானத்திடம் தற்போது, 10 ஆயிரத்து 300 கிலோ தங்கம் உள்ளது. மேலும், 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளன. அதனால், தங்கம் மற்றும் செலவு தேவஸ்தானத்துக்கு ஒரு பிரச்னையாக இருக்காது என்று கூறப்படுகிறது.