சென்னை: தெற்கு ரயில்வே பொங்கலுக்கு 4 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள நிலையில், அந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8மணிக்கு தொடங்கி யது.  சுமார் 7நிமிடங்களில்  4 ரயில்களுக்கான முன்பதிவும் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் பெரும்பாலான தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சொந்த ஊர்களில் பாரம்பரிய முறைப்படி மக்கள் பொங்கலை கொண்டாடுவதால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதையொட்டி, தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்கும் நிலையில், தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதன்படி, தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8மணிக்கு தொடங்கியது. தற்போதைய டிஜிட்டல் வளர்ச்சி காரணமாக, ஏராளமானோர் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்த நிலையில், ரயில் நிலையங்களில் காத்திருந்து முன்பதிவு செய்த பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்து விட்டன. 7 நிமிடங்களுக்குள் டிக்கெட்டுக்கள் முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ரயில் நிலைய கவுண்டரில் நின்ற 5 சதவீதம் பேருக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தாகவும், மீதமிருந்த  5 சதவீதம் பேர் டிக்கெட் கிடைக்காமல் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பெரும்பாலானோர் ஆன்லைனிலேயே டிக்கெட் எடுத்துவிட்டதால் கவுண்டரில் காத்து நின்றவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. என்று கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-நாகர்கோவில், கொச்சுவேலி-தாம்பரம், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையே 5 சிறப்பு ரெயில்களும் மறு மார்க்கமாக 5 சிறப்பு ரெயில்களும் என மொத்தம் 10 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளன. இதில் தென்மாவட்டங்களுக்கு மட்டும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.