டெல்லி: தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 149 இடங்களிலும், அதிமுக கூட்டணி 84 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதில் திமுக நேரடியாக 115 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதுபோன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 17, மதிமுக 4, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 4, மற்றவை 5 என மொத்தம் 149 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக தலைவர் முதல்வராக பதவி ஏற்பதும் உறுதியாகி உள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடி வருகினறனர்.
. இந்த நிலையில், மகத்தான வெற்றி பெற்ற முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வெற்றிகரமாக ஆட்சியை நடத்த வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.