டில்லி

ராணுவ நடவடிக்கைகள் குறித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியின் இரண்டாம் பாகம் இதோ

முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் ராணுவ நடவடிக்கைகள் குறித்து பேட்டி அளித்திருந்தார்.   அதன் முதல் பாகத்தை நேற்று வெளியிட்டிருந்தோம்.     அதன் இரண்டாம் பாகம் இதோ

கே: நீங்கள் அணு ஆயுத தடையை பராமரிக்க வேண்டும் என சொல்லி வரும் போது மோடி அணு ஆயுதங்கள் தீபாவளி வெடிகள் அல்ல என கூறி உள்ளார்.  இதனால் மக்களை கவர அவர் முயல்கிறாரா?

ப: அணு சக்தி என்பது நமது பலம் மற்றும் பாதுகாப்பு அம்சமாகும்.   நேரு அணு சக்திக்கு அடிக்கல் நாட்டினார்.   இந்திரா காந்தி கடந்த 1974 ஆம் வருடம் முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நடத்தினார்.   அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் ஒவ்வொரு முறையும் அணு சோதனைகள் ராணுவம் மற்றும் வேறு துறைகளில் முன்னோக்கி சென்றுள்ளது.

இதனால் வாஜ்பாய் அரசின் 13 மாத கால ஆட்சியில் ஆயுத சோதனைகள் நடந்தன.  அணு சக்தி என்பது நமது நாட்டில் ஏற்கனவே இரு முறை பரிசோதிக்கப்பட்டுள்ளது.    முன்பு காங்கிரஸ் கட்சி அணு ஆயுத மின் உற்பத்தை ஆலை கொண்டு வரவதாக இருந்த போது பாஜக எதிர்ப்பு தெரிவித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.  இப்போது அணு ஆயுதத்தை ஆதரிக்கும் பாஜக அப்போது ஏன் எதிர்த்தது?

நாங்கள் எப்போதும் அணு ஆயுத சோதனைகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தியது இல்லை.   நமது அணு ஆயுதக் கொள்கை என்பதற்கு ஒரு தனி மரியாதை உள்ள்து.   அதனால் எந்த ஒரு பிரதமரும் அணு ஆயுத சக்தியை தனது அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தியதில்லை.    இப்போது அவ்வாறு பயன்படுத்துவது தோல்வி பயத்தினால் என நான் எண்ணுகிறேன்.

கே: காங்கிரஸ் கட்சி வேலையில்லா திண்டாட்டம்,  கிராமப்புற மக்கள் துயரம் குறித்து தேர்தல் களத்தில் பேசி வரும் போது  பாஜக பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் குறித்து பேசுவதால் வெற்றி அடைவார்கள் என நினைக்கிறீர்களா?

ப: பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசு முழு தோல்வி அடைந்துள்ளது.  கடண்ட 5 வருடங்களில் காஷ்மீரில் மட்டும் தீவிரவாத தாக்குதல் 176% அதிகரித்துள்ளது.  பாகிஸ்தான் ஊடுருவல் 1000% அதிகரிததுள்ளது.   பாதுகாப்பு படை மீது தீவிரவாதிகள் மொத்தம் 17 முறை தாக்குதல் நிகழ்த்தி உள்ளனர்.    கடந்த 57 ஆண்டுகளில் முதல் முறையாக ராணுவத்துக்கான நிதி உதவி குறக்கப்பட்டுள்ளது.   இது போல பல தகவல்கள் அரசு பதுகாப்பு துறைக்கு முக்கியத்துவம் தராததை சுட்டி காட்டுகின்றன.

மோடி வருடத்துக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அளிப்பதாக தெரிவித்து ஆனால் அந்த வாக்குறுதியை நிறவேற்றவில்லை.   ஆனால் அவருடைய பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி யால் 4 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.    இந்த இரு நடவடிக்கைகளாலும் காங்கிரஸ் ஆட்சியில் மேம்பட்டு இருந்த இந்திய பொருளாதாரம் படுகுழியில் விழுந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உற்பத்தி குறைந்து ரூ. 3 லட்சம் கோடி இழப்பை பொருளாதாரம் சந்தித்தது.    இது நடுத்தர மற்றும் சிறு/குறும் தொழிலை முழுவதுமாக அழித்தது.  அப்போது இழந்த உயிர்களுக்கு அரசு பொறுப்பு ஏற்குமா?

கிராமப்புற  வளர்ச்சி பரவலாக்கத்தால்  விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.    விவசாயிகளுக்கு 505 அதிக விலை  பெற்று தருவதாக சொன்ன பாஜக குறைந்த பட்ச விற்பனை விலையையும் நிற்ணயிக்கவில்லை.    காங்கிரஸ் ஆட்சியில் விவசாய வளர்ச்சி வருடத்துக்கு 4.2%  ஆக இருந்தது.   பாஜக ஆட்சியில் இது அப்படியே தலைகீழாகி வருடத்துக்கு 2.9% கீழ் இறங்கியது.

பிரதமரின்பயிர்காப்பிட்டு திட்டத்தினால் தனியார் காப்பிட்டு நிறுவனங்கள் வளர்ந்ததே தவிர விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை.   விவசாய ஏற்றுமதிகள் குறைகின்றன.   இதனால் விவசாயிகள் கடும் துயரம் அடைகின்றனர்.  இந்தியாவின் விவசாயிகள் இந்த நாட்டின் ஒரு அங்கம் இல்லையா?    தனது தோல்வியை மறைக்க பாஜக ஒவ்வொரு நாளும் புதுக் கதைகள் கூறி வருகின்றன.   அவற்றில் ஒன்று இந்த பாதுகாப்பு  பிர்ச்சினை மற்றும் தீவிரவாதம் ஆகும.

இந்த பேட்டியின் அடுத்த பாகம் விரைவில்…..