மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தனா இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் .

சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதி துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது.

தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பிரத்தியேக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது .அதில் இயக்குனர் மணிரத்னம், ராதிகா, சரத்குமார், சுஹாசினி ஆகியோர் ஒன்றாக உள்ளனர்.