டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பாரத் நியாய் யாத்ரா’ என்ற பெயரில்  மணிப்பூர் முதல் 14 மாநிலங்கள் வழியாக மும்பை வரை  மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் . இந்த யாத்திரையானது சுமார் 6200 கி.மீ. தூரம் என்று கூறப்படுகிறது.

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’, ‘பாரத் நியாய யாத்ரா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராகுலின் இந்த யாத்திரை  நடைபயணம் இல்லாம் பேருந்து மூலம்  நடைபெற உள்ளது.

மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில்ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். இந்த யாத்திரையானது பொங்கல் பண்டிகையான  வருகிற ஜனவரி 14 ந்தேதி தொடங்கி  மார்ச் 20 வரை நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் இந்த யாத்திரை எதிர்பார்த்ததைவிட மக்களிடையே பெரும் வரவேற்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரை மாற்றி, பாரத் நியாய் யாத்திரை  என்ற பெயரில் வடமாநிலங்களில் மீண்டும் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கொண்டாட இருப்பதை முன்னிட்டு டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கூறியதாவது,

, “ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய் யாத்திரை’ நடத்த அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் அனுபவத்துடன் ராகுல் காந்தி தற்போது பாரத் நியாய யாத்திரையை மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்த யாத்திரையின்போது, அந்த பகுதிகளைச் சேர்ந்த  இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிறை குறைகளை கேட்டறிகிறார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது 4,500 கி.மீ பயணம் செய்த ராகுல், தற்போது இந்த யாத்திரையில் 6,200 கிமீ தூரம் பயணிக்க உள்ளார்.

ராகுலின்  ‘பாரத் நியாய் யாத்திரை’ யானது, மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் உள்பட  14 மாநிலங்கள் மற்றும்  அதில் உள்ள 85 மாவட்டங்கள் வழியாக நடைபெற உள்ளது.

ஆனால், பாரத் ஜோடோ போல் நடைபயணமாக இல்லாமல், இம்முறை பேருந்து மூலம் யாத்திரை நடத்தப்படும். பேருந்து யாத்திரை என்றாலும் நடைப்பயணங்களும் இருக்கும்” என தெரிவித்தார்.

,ராகுலின்  ‘பாரத் நியாய் யாத்திரை ஜனவரி 14ந்தேதி  மணிப்பூர் தலைநகர் இம்பாலில்  தொடங்க உள்ளது. இதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த யாத்திரை கிழக்கு-மேற்கு மாநிலங்களை மையமாக கொண்டு நடைபெறும்.

 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை அல்லது இந்திய ஒற்றுமை யாத்திரை என்கிற பெயரில் யாத்திரை மேற்கொண்டார். கடந்த 2022 செப்டம்பர் 7-ல் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி ஜனவரி 2023-ல் ஸ்ரீநகரில் நிறைவுபெற்றது இந்த யாத்திரை. இந்த யாத்திரையானது, 2022-ம் ஆண்டு செப். 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், வழியாக 4,080 கிமீ பயணித்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கடந்து ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது.

 2024 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் பாரத நியாய யாத்திரையால் காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.