டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று மாலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக வந்த அழைப்பை அடுத்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி சாணக்யபுரி பகுதியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இன்று மாலை 5:10 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி தீயணைப்பு துறைக்கு இன்று மாலை 5:47 க்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்தனர்.

இந்த பகுதி முழுவதும் டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த குண்டுவெடிப்பு எதனால் நிகழ்ந்தது, இதை யார் நிகழ்த்தினார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.